மூளைச் சாவு உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி: மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு உறுப்பு கூட தானம் பெறாத அவலம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால், விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இறக்கும் நபர்களிடம் இருந்து, இதுவரை ஒரு உடல் உறுப்புகூட தானமாக பெறப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வாகன விபத்துகள் மற்றும் இதர சம்பவங்களில் மூளைச் சாவால் இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் கண்கள், இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், இதய வால்வுகள், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகள் உயிருக்கு போராடும் மற்ற நபர்களுக்கு பொருத்தி உயிர் வாழவைக்கும் உன்னதமான மனித நேய சம்பவங்கள் சமீப காலமாக அடிக்கடி நிகழ்கிறது.

அதனால், இந்தியாவிலேயே மூளை ச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தானம் என்றாலே இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதே. ஆனால், இந்த தானத்தில் ஏழை, நடுத்தர மக்களிடம் இருந்து உடல் உறுப் புகளை இலவசமாகப் பெற்று, வசதி படைத்தவர்களுக்கு பொருத் துவதில் மட்டும் இருப்பதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளுக்கு உடல் உறுப் புகளை தானமாக அளிப்பதிலும், பெறுவதிலும் எட்டாக்கனியாகவே உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரி மைச்சட்டத்தில் பெற்ற தகவல்கள் அடிப்படையில், மதுரை சமூகச் செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் மூளைச் சாவு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த 2015- ம் ஆண்டு வரை இந்த திட்டத்தில் மூளைச்சாவு அடைந்த 726 நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. 679 கல்லீரல், 1,316 சிறுநீரகம், 84 நுரையீரல், 174 இதயம், 1,104 கண்கள் உள்ளிட்ட 4,028 உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

இதில் 600-க்கும் மேற்ப ட்டவர்களின் உடல் உறுப்புகள் தனியார் மருத்து வமனைகளுக்குத் தான் தானமாக கொடுக்கப்பட் டுள்ளன.

அதுவும், சென்னையைத் தவிர, தமிழகத்தின் பிற அரசு மருத்து வமனைகளில் உடல் உறுப்புகளை அரசு பெரியளவில் தானமாகப் பெறவில்லை.

தமிழகத்திலேயே அதிக நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை மூளைச்சாவால் இறந்த ஒரு நபரிடம் இருந்து கூட உடல் உறுப்புகளை தானமாகப் பெற்றதில்லை.

மதுரை நகர் மற்றும் மாவட்ட சாலை விபத்துகளில் தலையில் காயம டைந்து சிகிச்சைக்கு வருபவர்களே அதிகம். மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் காயமடைவோர், தனியார் மருத்துவமனைகளை விட மூன்று மடங்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத்தான் கொண்டு வரப்படுகின்றனர்.

இங்கு 2013-ம் ஆண்டு தலைக்காய சிகிச்சைக்கு அனுமதி க்கப்பட்ட 887 நபர்களில் 778 பேர் இறந்துள்ளனர். 2014-ல் 777 பேரில் 445 பேர் இறந்துள்ளனர். இவர்களில் எத்தனை பேர் மூளைச்சாவால் இறந்துள்ளனர் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் அடை யாளப்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, மூளை சாவு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்