பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்த தினம் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளும் சேவை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த நாளில் நாடு முழுவதும் மக்களுக்குப் பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். இந்த முறை இந்த சேவைகளை வழங்குவது 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்குப் பல்வேறு தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
» தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்
» செப்.17 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago