இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையில் இருந்து ரயில் மூலம் அயோத்தி, காசி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் மக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. மனச்சோர்வில் இருக்கும் மக்கள் நிம்மதியாக வழிபாடு செய்யும் வகையில் ஐஆர்சிடிசி மீண்டும் சுற்றுலா திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் அயோத்தி, காசி, அலகாபாத், பூரி, கோனார்க் ஆகிய ஆன்மிக இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுலா ரயில் பயணம் வரும் நவம்பர் 1-ம் தேதி மதுரையில் இருந்து கிளம்புகிறது. இந்த ரயில், கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, சென்னை வழியாகச் செல்லும். 11 நாட்கள் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு ரூ.11 ஆயிரம் கட்டணமாகும். இதில், ரயில் பயணக் கட்டணம், தங்கும் வசதி (ஹால்), வாகனப் போக்குவரத்து, காலை, மதியம், இரவில் சைவ உணவு ஆகியவை அடங்கும். மத்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.
» செப்.16 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்
» முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை: அதிமுக நிர்வாகிகள் போராட்டம்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகைகளைப் பெறலாம். இந்தச் சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள், முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி கோவை அலுவலகத்தை 90031 40655, 82879 31965 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்''.
இவ்வாறு ஐஆர்சிடிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago