கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு; தேவையில்லை என்றால் கழட்டி வைத்துக் கொள்ளலாம்: பாமக குறித்து செல்லூர் கே.ராஜூ கருத்து

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி. தேவையில்லை என்றால் கழட்டி வைத்துக் கொள்ளலாம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி, இன்று (செ. 15) மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதன்பின்னர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அண்ணாவின் கொள்கைகள், சித்தாந்தத்தைத் தாங்கிப் பிடித்து அதிமுக செயல்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்கான பணியிலும் அதிமுக தமிழகத்தில் மிக சிறப்பாகச் செயல்படுகிறது. அண்ணாவின் எண்ணத்தைத் தற்போதுள்ள முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.

திமுகவின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உதயநிதி, கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதுபோல நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யாததற்கு திமுக தலைமையிலான தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

அதற்குக் காரணங்களை அடுக்கி மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றக் கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஆட்சியில் சட்ட மசோதாவை ஏற்கெனவே கொண்டு வந்துவிட்டோம். திமுக கொண்டுவந்த நீட் தேர்வு சட்ட மசோதாவில் ராஜன் கமிட்டி பரிந்துரை மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

திமுக கொண்டுவந்துள்ள நீட் தேர்வு சட்ட மசோதாவை திமுக எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி. தேவையென்றால் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளலாம். தேவையில்லை என்றால் கழட்டி வைத்துக் கொள்ளலாம். அதிமுக எந்தவொரு காலகட்டத்திலும் கூட்டணியை நம்பி இருந்ததில்லை. கூட்டணி என்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில்தான் எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கைப் பொறுத்து அமையும். எனவே, பாமக தனித்துப் போட்டியிடுவதால் வருத்தம் இல்லை".

இவ்வாறு செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்