தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. தான் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தது, 'மெட்ராஸ் ஸ்டேட்'டுக்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டியது, இருமொழிக் கொள்கை ஆகிய மூன்றும் அளப்பரிய சாதனைகளாக கருதப்படுகிறது.
அவரின் பிறந்த நாளான இன்று அண்ணாவின் சாதனைகளை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
» 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி; நாளை விருப்ப மனு: பாமக அறிவிப்பு
» மாணவர்கள் போராட்டம் எதிரொலி; பட்டுப்புழுவியல் துறைக்கு மாணவர் சேர்க்கை: வேளாண் பல்கலை அறிவிப்பு
இந்நிகழ்வுகளின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி., உதயநிதி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago