நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பது சிரமம்: கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பது சிரமம். அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கடந்த காலங்களில், தமிழகத் தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்குச் சென்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். நீட் தேர்வால் தனியார் பள்ளி மாண வர்கள், பயிற்சி வகுப்புக்கு செல்வோர் மட்டுமே பயன்பெற முடியும். தொடக்கத்தில் நான் நீட் தேர்வை ஆதரித்தேன். அதன்பிறகு தரவுகள் அடிப்படையில் அதனை மாற்றிக் கொண்டேன். மேலும் நீட் தேர்வு இல்லாதபோதும், மருத்துவ படிப்பில் குறைந்த எண்ணிக்கையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.

எனவே, நீட் தேர்வு இல்லாவிட்டாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் எந்த ரயில் நிலையத்தை தனியார் மயமாக்கினோம் என் பதை மத்திய நிதியமைச்சர் தெரி விக்க வேண்டும். பாஜக அரசை விமர்சிப்பவர்களை அம லாக்கத் துறை, சிபிஐ மூலம் அச்சுறுத்துகின்றனர். அவர்களை ஆதரிப்பவர்களை மட்டுமே வாழ விடுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்