9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். இம்மாவட்டங்களுக்கு செப்.15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வந்தது. இதனிடையே, இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 31-ம் தேதி வெளியிட்டது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
» தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
» சிறுநீரகத் தொற்று, வயிற்று வலியால் பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி
இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியதாவது:
''வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (செப்.15) தொடங்கி செப்.22-ம் தேதி வரை நடைபெறும். 23-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25-ம் தேதி அன்று வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி 1 மணி நேரம் வாக்களிக்கலாம். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் நடைபெறும்.
தற்செயல் தேர்தல் நடைபெற உள்ள ஏனைய 28 மாவட்டங்களில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும். அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அக்.16-ம் தேதி வரை அமலில் இருக்கும். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்’’.
இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago