கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை தினசரி 5 முறை மீண்டும் இயக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர், 2021 மார்ச் மாதம் முதல் சிறப்பு ரயில் சேவையாக பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மேட்டுப்பாளையம் - கோவை இடையே பயணக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ,ராசா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை-மேட்டுப்பாளையம் இடையிலான பயணிகள் ரயில் தற்போது தினமும் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
முன்பு இந்த ரயில் 5 முறை இயக்கப்பட்டு வந்தது. மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால், கோவை- மேட்டுப்பாளையம் இடையே பேருந்தில் பயணிக்க அதிக நேரமாகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சாதாரண பயணிகள் ரயிலில் கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், தினசரி கூலி வேலைக்குச் செல்வோர், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கோவை - மேட்டுப்பாளையம் இடையே சாதாரணப் பயணிகள் ரயிலை மீண்டும் தினசரி 5 முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago