கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை சுமார் 1,600 என்ற அளவில் உள்ளது. நேற்று (செப். 10) புதிதாக, 1,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1,834 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (செப். 10) மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார். மேலும், கரோனா பரவ வாய்ப்புள்ளதால், கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
» 38,000 பேர் பாதிப்பு; ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும்: ராமதாஸ்
» பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தும் மத்திய அரசு: ப.சிதம்பரம் கண்டனம்
வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago