புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் விளையாடுவதற்காக சென்றபோது 5 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகரக் காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 5 வயதுச் சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் (29) என்பவர் கடந்த சில நாட்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் W-17 செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்தார்.
W-17 செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் என்பவரைப் பிடித்து விசாரணை செய்ததில், மேற்படி 5 வயதுச் சிறுமி விக்னேஷின் வீட்டில் விளையாடுவதற்காகச் சென்றபோது பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
அதன்பேரில், W-17 செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விக்னேஷ், விசாரணைக்குப் பின்னர் இன்று (07.09.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago