தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு

By த.அசோக் குமார்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலநீலிதநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், கடையம் ஒன்றியக்குழு தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர், கீழப்பாவூர், குருவிகுளம், செங்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம், செங்கோட்டை, தென்காசி, வாசுதேவநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் ஒன்றியத்தில் சுப்பையாபுரம், மாயமான்குறிச்சி, குத்தப்பாஞ்சான் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், மேல மருதப்பபுரம், ஊத்துமலை ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும், அச்சங்குட்டம், கடங்கனேரி, காடுவெட்டி, காவலாக்குறிச்சி, கிடாரகுளம், குறிச்சாம்பட்டி, மாறாந்தை, மருக்காலங்குளம், மேலகலங்கல், நவநீதகிருஷ்ணபுரம், நெட்டூர், சிவலார்குளம் ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அய்யனார்குளம், பலபத்திரராமபுரம், கருவந்தா, கீழகலங்கல், கீழ வீராணம், குறிப்பன்குளம், மருதம்புத்தூர், மேலவீராணம், நல்லூர், ஓடைமறிச்சான், புதுப்பட்டி, சீவலபுரம் கரடிஉடைப்பு, வடக்கு காவலாக்குறிச்சி, வாடியூர் ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடையம் ஒன்றியம் மேல ஆம்பூர், சிவசைலம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், கீழக்கடையம், பொட்டல்புதூர் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்தான்கட்டளை, தர்மபுரம்மடம், கடையம், கடையம் பெரும்பத்து, மடத்தூர், முதலியார்பட்டி, தெற்கு மடத்தூர், துப்பாக்குடி, வெங்கடாம்பட்டி, வீரசமுத்திரம் ஊராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடைச்சாணி, அணைந்தபெருமாள்நாடானூர், கோவிந்தப்பேரி, கீழ ஆம்பூர், மந்தியூர், பாப்பான்குளம், ரவணசமுத்திம், சேர்வைகாரன்பட்டி, திருமலையப்பபுரம் ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் ஒன்றியத்தில் ஆனைகுளம், காசிதர்மம், புன்னையாபுரம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், சொக்கம்பட்டி, கொடிக்குறிச்சி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. போகநல்லூர், இடைகால், கம்பனேரி, புதுக்குடி, வேலாயுதபுரம் ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குலையநேரி, நயினாகரம், நெடுவயல், பொய்கை, திரிகூடபுரம், ஊர்மேலழகியான் ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் ராஜகோபாலப்பேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், ராஜபாண்டி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி, குணராமநல்லூர், குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், நாகல்குளம், பெத்தநாடார்பட்டி, பூலாங்குளம், துத்திகுளம், வீரகேரளம்புதூர், இடையர்தவணை ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டள்ளது. அரியப்பபுரம், ஆவுடையானூர், இனாம்வெள்ளகால், கல்லூரணி, கழுநீர்குளம், கீழ வெள்ளகால், மேலகிருஷ்ணபேரி, சிவநாடானூர், திப்பணம்பட்டி ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மைப்பாறை, முக்கூட்டுமலை, பிள்ளையார்நத்தம், உமையத்தலைவன்பட்டி, வெள்ளகுளம், ஏ.கரிசல்குளம், கலிங்கப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், அத்திப்பட்டி, வராகனூர், சத்திரங்கொண்டான், கொளக்கட்டகுறிச்சி, நாலாந்துலா, சாயாமலை, ஜமீன்தேவர்குளம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அய்யனேரி, சிதம்பரபுரம், இளையரசனேந்தல், கே.ஆலங்குளம், குறிஞ்சாகுளம், வடக்கு குருவிகுளம், தெற்கு குருவிகுளம், பெருங்கூட்டூர், பிச்சைதலைவன்பட்டி, புளியங்குளம், ராமலிங்கபுரம், செவல்குளம், வெங்கடாசலபுரம் ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அழகாபுரி, அப்பனேரி, சிட்ராம்பட்டி, கே.கரிசல்குளம், கலப்பாளங்குளம், காரிச்சாத்தான், நக்கலாம்முத்துப்பட்டி, பலாங்கோட்டை, சங்குபட்டி, வடக்குபட்டி, வாகைகுளம் ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோ.மருதப்பபுரம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், குருக்கள்பட்டி, வெள்ளாளங்குளம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இலந்தைகுளம், கீழநீலிதநல்லூர், மகேந்திரவாடி, மலையான்குளம், பட்டாடைகட்டி, சேர்ந்தமரம் மஜரா, உசிலங்குளம், வடக்கு பனவடலி ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்படுள்ளது. சின்னகோவிலான்குளம், ஈச்சந்தா, மருதங்கிணறு, நடுவக்குறிச்சி மேஜர், நடுவக்குறிச்சி மைனர், பெரியகோவிலான்குளம், சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் ஒன்றியத்தில் கீழ வீரசிகாமணி, பந்தப்புளி, பெரியூர், தெற்கு சங்கரன்கோவில், பெருமாள்பட்டி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், அரியநாயகிபுரம், பொய்கை, புன்னைவனம், வாடிகோட்டை ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. களப்பாகுளம், மணலூர், மாங்குடி, நொச்சிகுளம், பெரும்பத்தூர், செந்தட்டியாபுரம், சுப்புலாபுரம், திருவேட்டநல்லூர், வீரிருப்பு ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரிவலம்வந்தநல்லூர், குவளைக்கண்ணி, மடத்துப்பட்டி, பனையூர், பருவக்குடி, ராமநாதபுரம், சென்னிகுளம், வடக்குபுதூர், வயலி, வீரசிகாமணி ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சீவநல்லூர் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், கிளாங்காடு ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப்பிரிவுக்கும் துக்கப்பட்டுள்ளது. இலத்தூர், தெற்குமேடு ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், கற்குடி, புளியரை ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் கணக்கபிள்ளைவலசை, பிரானூர் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், குத்துக்கல்வலசை, சுமைதீர்த்தாபுரம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காசிமேஜர்புரம், பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், வல்லம், மத்தளம்பாறை ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, பெரியபிள்ளைவலசை, சில்லறைபுரவு ஊரட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரியூர், மலையடிக்குறிச்சி, நாரணபுரம், தலைவன்கோட்டை ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், கூடலூர், முள்ளிகளம், உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தாருகாபுரம், துரைசாமியாபுரம், நகரம், ராமசாமியாபுரம், சங்குபுரம், தென்மலை, விஸ்வநாதபேரி ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், தேவிபட்டணம், இனாம் கோவில்பட்டி, கோட்டையூர், நெல்கட்டும்செவல், ராமநாதபுரம், சங்கனாப்பேரி, சுப்ரமணியபுரம், திருமலாபுரம் ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்