தக்காளி பழங்களில் பரவும் ‘டொமட்டோ பின் வாம்’ நோய்: தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த குண்டூசி பூச்சிகள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு வந்த ‘குண்டூசி அந்து பூச்சிகள்’ தக்காளி செடிகள், பழங்களில் டொமட்டோ பின் வாம் துளைப்பான் நோயை வேகமாக பரப்பி வருவதால் 30 சதவீதம் உற்பத்தி குறைவதுடன் சந்தைகளில் இந்த நோய் தாக்கிய தக்காளிப் பழங்களுக்கு வரவேற்பு இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.

உலகளவில் இந்தியா 146.55 மில்லியன் மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்து சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இருக் கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 28 சதவீதம் உற்பத்தி செய்து ஆந்திர மாநிலம் முதலிடத்திலும், 2 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யும் தமிழகம் 8-வது இடத்திலும் இருக்கிறது.

கடந்த ஓர் ஆண்டாக தக்காளி செடிகள், பழங்களில் ‘டொமட்டோ பின் வாம்’ என்ற நோயைப் பரப்பும் குண்டூசி அந்து பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த பூச்சிகள், செடிகளின் இலைகள், பழங்களில் துளை போடுவதால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தக்காளி மகசூல் குறைகிறது. மதுரை, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தக்காளி அதிகளவு சாகுபடியாகும் பகுதிகளில் இந்த பூச்சிகளின் தாக்கம் வேகமாக பரவுகிறது.

இவற்றைக் கட்டுப்படுத்த தெரியாமல் விவசாயிகள் கலங்கிப்போய் உள்ளனர். சந்தைகளில் இந்த பூச்சிகள் தாக்கிய துளை விழுந்த தக்காளி பழங்களை நுகர்வோர் வாங்க விரும்பாததால் விலையில்லாமல் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். அதனால், தமிழகத்தில் நடப்பாண்டு தக்காளி சாகுபடி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வியாபாரிகள் ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து வீரிய ஒட்டுரக கவர்ச்சியான தக்காளிகளை இறக்குமதி செய்கி ன்றனர்.

இதுகுறித்து மதுரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியின் பூச்சியியல் துறை தலைவர் மா. கல்யாணசுந்தரத்திடம் நேற்று கேட்டபோது அவர் கூறி யது: குண்டூசி போல் துளை போடுவதால் இந்த பூச்சிகளை குண்டூசி அந்து பூச்சிகள் என அழைக்கின்றனர். இந்த வகை பூச்சிகள் கடந்த ஒன் றரை ஆண்டுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு பரவி யது. அந்நாட்டில் இருந்து இறக்குமதியான பழங்கள், பொருட்களுடைய அட்டைப் பெட்டிகளில் கண்ணுக்குத் தெரியாமல் இந்த பூச்சிகள், முட்டைகள் ஒட்டியிருந்துள்ளன.

ஓசூர் பகுதியில்தான் இது முதலில் பரவியது. அங்கிருந்து தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கி யுள்ளது. இந்த பூச்சிகளின் தாய் பூச்சிகள் தக்காளியில் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகளில் இருந்து வெளியாகும் புழுக்கள் குண்டுபூசி போல் தக்காளியில் துளை போட்டு (நுண் துளை) உள்ளேயிருக்கும் சாறுகளை உறிஞ்சி சாப்பிட்டுவிட்டு கழிவுப் பொருட்களை தக்காளியிலேயே தங்கவிடுகின்றன. துளை விழுந்த இந்த தக்காளிகள் வியாபார ரீதியாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுகின்றன.

முட்டையில் இருந்து இந்த புழுக்கள் வெளிவந்து 18 நாள்களுடன் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றன. ஒரு தாய் பூச்சி தக்காளியில் 250 முதல் 300 முட்டைகளை இடுகிறது. மாலை நேரங்களில் தக்காளி செடிகளை தட்டினால் கூட்டம், கூட்டமாக இந்த பூச்சிகள் பறப்பதை கண்கூடாகப் பார்க்கலாம். இந்த பூச்சிகள் தோட்டத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ளவும், கட்டுப் படுத்துவும், மஞ்சள் அட்டைப் பொறிகளை ஏதாவது ஒரு எண் ணெய் தடவி ஆங்காங்கே ஒரு ஏக்கரில் 20 இடங்களில் வைக்கலாம். தாய் பூச்சிகள் இந்த அட்டையில் ஒட்டி இறந்துவிடும். வேப்பம் எண்ணெய் 30 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளில் தெளிக்கலாம் என்றார்.

விவசாயிகளை நுகர்வோர் ஆதரிக்கணும்

கல்யாணசுந்தரம் மேலும் கூறியதாவது: இந்த பூச்சிகள் துளை போட்ட தக்காளிப் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த கெடுதலும், பாதிப்பும் இல்லை. ஆனால், நுகர்வோர்கள் துளை விழுந்த தக்காளி உள்ளிட்ட அனைத்து பழங்கள், காய்கறிகளை சந்தைகளில் வாங்காமல் புறக்கணிக்கின்றனர். அதனால், விவசாயிகள் பொதுமக்களுக்கு பூச்சி தாக்குதல் இல்லாத பழங்களை உற்பத்தி செய்ய அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். சில விவசாயிகள் உடனடியாக கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவு பயன்படுத்துவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கவர்ச்சியான தோற்றமுள்ள பழங்கள் முக்கியமில்லை. அவற்றில் உள்ள சத்துதான் முக்கியம் என்பதை நுகர்வோர் உணர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்