நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி கால்பந்தாட்டப் போட்டி: சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

By செய்திப்பிரிவு

தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டனர்.

நடக்கவிருக்கும் 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்காக சென்னையில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சியின் தேர்தல் பிரிவு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள் கலந்து கொண்ட கால்பந்தாட்டப் போட்டி வியாசர்பாடி கால்பந்தாட்ட மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மாநகராட்சி அலுவலர்கள், முல்லை நகர், சாமந்திப்பூ நகர், வியாசர்பாடி ஆகிய 4 அணிகள் பங்கேற்றன. முல்லை நகர் அணி - மாநகராட்சி அலுவலர்கள் அணியுடனும், சாமந்திப்பூ நகர் அணி - வியாசர்பாடி அணியுடனும் மோதின. தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “நேர்மையான வாக்கு-வளமான வாழ்வு” என்ற வாசகம் கொண்ட உடைகளை விளையாட்டு வீரர்கள் அணிந்திருந்தனர்.

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று வெள்ளிக்கிழமை அதே இடத்தில் நடைபெறுகிறது.

வெற்றிப் பெறும் அணிக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த வாசகம் பொறிக்கப்பட்ட கோப்பை பரிசாக வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்