அமாவாசையை முன்னிட்டு பேரூர், மருதமலை உள்ளிட்ட 4 கோயில்களில் பக்தர்களுக்கு நாளை அனுமதி இல்லை

By க.சக்திவேல்

அமாவாசையை முன்னிட்டு அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க பேரூர், மருதமலை உள்ளிட்ட 4 கோயில்களில் நாளை (செப்.6) பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகக் கோயில்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் நடை மூடப்படும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 1-ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமாவாசை நாளான செப்டம்பர் 6-ம் தேதி கோயில்களில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்தக் கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்" என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்