'பசுமை முதன்மையாளர் விருது'; ஆயிரம் விளக்குப் பகுதியில் பசுமைப் பூங்கா: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆயிரம் விளக்குப் பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், அத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

''1. சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு பசுமைக் கட்டிடம்

சுற்றுச்சூழல் துறை தற்போது வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, சுற்றுச்சூழல் துறை சிறந்த வகையில் செயல்படும் விதமாக உரிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பசுமைக் கட்டிடம் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

2. முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டம்

சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், இயற்கையைப் பாதுகாக்கும் விதமாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் புதிய பசுமைத் திட்டங்களைக் கண்டறிவதற்கும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும், 'முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

3. சிறந்த சுற்றுச்சூழல் மிக்க அழகிய கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக நடவடிக்கை

2021-2022ஆம் ஆண்டில், தமிழகத்தில் ஒரு கடற்கரைக்கு 10 கோடி ரூபாய் வீதம், இரு கடற்கரைகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் தமிழக சுற்றுச்சூழல் துறை மூலம் கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும்.

4. தொழிற்சாலைகளை இயக்குவதற்கான இசைவாணை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதற்கு பதிலாகத் தகுதியான தொழிற்சாலைகளுக்கு கால அளவினை நீட்டித்துத் தொகுப்பாக வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

5. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைப்புடனும் மற்றும் முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 'பசுமை முதன்மையாளர் விருது' ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.

6. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை 32 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கல்.

7. தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களைக் கொண்டு பிரச்சாரம்.

8. சென்னை - ஆயிரம் விளக்குப் பகுதியில் பசுமைப் பூங்கா அமைத்தல்''.

இத்தகைய அறிவிப்புகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்