ஊதிய நிலுவையை வழங்கக் கோரி காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று(செப்.3) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதிய நிலுவையை வழங்கக் கோரி அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், நிறைவேற்றப்படாத நிலையில், நேற்று (செப்.2) முதல் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மட்டும், இன்று திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
» புதிய கல்விக் கொள்கை அமல்: மத்தியப் பல்கலை. துணைவேந்தர்களைச் சந்திக்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர்
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவை ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
இதையதையடுத்து சாலை மறியலை கைவிட்டு, உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago