தாம்பரம் மாநகராட்சியில் இணையும் 15 ஊராட்சிகளில் தேர்தல் நடத்த மக்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

தாம்பரம் நகராட்சியுடன், 15 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் விடுபட்டுள்ள செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட உள்ள 15 ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகி தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:

தாம்பரம் நகராட்சி மற்றும் அதனுடன் இணைய உள்ள பகுதிகள் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் அகற்றும் வசதி, குடிநீர் வசதி இன்றுவரை சிக்கலாகவே இருந்து வரு கிறது.

இந்நிலையில், தாம்பரத்துடன் இணையும் ஊராட்சிகளுக்கு இப்போது தேர்தலை நடத்தினால் மாநகராட்சியுடன் இணைவது தாமதமாகும். அதனால் அப்பகுதிகளில் குடிநீர், புதை கழிவுநீர் வடிகால்திட்டம் போன்றவை மேலும் தாமதமாகும்.

அதேபோன்று, தாம்பரம் மாநகராட்சியில் இணையும் பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது. அவற்றை எல்லாம் ஒன்றிணைத்து வார்டு மறுவரையறை செய்த பிறகு, மாநகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் மேயர் தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சியை வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்