புதுச்சேரியில் 138 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப்.1) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,419 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-77, காரைக்கால்-33, ஏனாம்-6, மாஹே-22 பேர் என மொத்தம் 138 பேருக்கு (2.55 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 161 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 624 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,813 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது. புதிதாக 67 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 112 (97.90 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
» ஒரே மாதத்தில் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
» அடுத்த அச்சுறுத்தல்; புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் ‘மியு’: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 15 ஆயிரத்து 117 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று அருண் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago