அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. இறந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமி காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமது துணைவியாரை இழந்து வாடும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
» மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல்
» ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் நாளை பெரியகுளத்தில் அடக்கம்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
எல்லா வகையிலும்ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பேருதவியாக இருந்த வாழ்விணையரின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். நேரடியான பேரிழப்புக்கு ஆளாகியுள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
நான்கு திங்களுக்கு முன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் மறைந்தார். இடிமேல் இடி விழுந்ததைப் போல, தன் துணைவியாரையும் இழந்து தவிக்கின்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கும், உற்றார், உறவினர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
அரசியலில் மூத்த தலைவரும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையும் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். அரசியலில் ஒ.பன்னீர்செல்வம் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜயலட்சுமி பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் கவலை அளித்தது. சில மாதங்களுக்கு முன்பு உறவை இழந்து வாடும் ஓபிஎஸ்,மேலும் இப்படி ஒரு சோகத்தை சந்திக்க நேர்ந்தது மேலும் வருத்தம் அளித்தது. அவர்களின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
ஓபிஎஸ் இல்லத்திற்குச் செல்கின்ற நேரத்தில் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து மகிழும் பண்பு கொண்டவர் விஜயலட்சுமி. ஓபிஎஸ்ஸின் பொதுவாழ்வுப் பணிகளுக்கு மிக உறுதுணையாக இருந்தவர். நல்ல குடும்பத் தலைவியாகவும், ஓபிஎஸ்ஸுக்கு உறுதுணையாகவும் வாழ்ந்திட்ட விஜயலெட்சுமி மறைவு ஒரு பேரிழப்பாகும்.
சில வாரங்களுக்கு முன்பு சகோதரரை இழந்த நிலையில் இன்று வாழ்க்கை இணையரையும் இழந்து நிற்கும் தோழர் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. காலம்தான் அவரைப் படிப்படியாகத் தேற்ற வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
ஓ.பன்னீர்செல்வத்தின் பொது வாழ்விலும் அரசியலிலும் பல்வேறு நிலைகளில் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் அவர் மனைவி விஜயலட்சுமி. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் பன்னீர்செல்வத்துக்கும் ரவீந்திரநாத், அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago