தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரிலும் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
#இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா என்ற ஹேஷ்டேக் நேற்றிரவு (பிப்.19) முதல் இன்று பிற்பகல் வரை இந்திய அளவில் ட்ரெண்ட்டானது. தமிழில் நூற்றுக்கணக்கான ட்வீட்கள் கொட்டப்பட்டன.
அதிமுக ஆதரவு இணையவாசிகள் இந்த ஹேஷ்டேக்கில், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் சாதனைகள் என்று தாங்கள் கருதுவதை ட்வீட்டி வருகிறார்கள்.
அதேவேளையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக ஆதரவாளர்கள் இதே ஹெஷ்டேக்கில் பாதங்கள் என தாங்கள் கருதுவதையும் பதிவு செய்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சிக்கு புகழாரம் சூட்டும் ட்வீட்களில் சில...
@satishbossn: 99% அதிமுக ஆதரவாளர்கள் திமுகவின் வெறுப்பு என்று ஒரே காரணமாகத்தான் அதிமுகவுக்கு வாக்கு அளிக்கின்றன #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@joe_selva1: 2Gனா என்ன காத்துலேயே கோடி கோடியா ஊழல் பண்ண கட்சி நம்ம ஊர்லதான் இருக்கு #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@sindhutalks திருக்குறளை அழிச்சு தன்னோட பேத்தல்களை பொன்மொழினு பஸ்ல எழுதுன கட்சி, ஸ்டிக்கர் பத்தி பேசலாமா? #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@kobikashok: செய்தி சேனல்களே இல்லாமல் தடுக்கப்பட்டபோது அதை உடைத்தெரிந்து அனைத்து செய்தி சேனல்களையும் மக்களுக்கு கொண்டு வந்த #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@IntTam: ஆவின் கொள்முதல் செய்வது தமிழக விவசாயிகளிடமிருந்து, அந்த வாழ்வாதாரத்தை அழிக்க நினைத்த ஆட்சி வராம இருக்கணும்னா #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@Green_Tamil: ஆட்சியில் குறை கண்டுபிடிக்க உ.பி.கள் திணறல். எதை சொன்னாலும் உங்க ஆட்சியில இதைவிட மோசம் என்ற பதில் ரெடியா இருக்கு #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@goldking_mdu: ஒரு நாளுக்கு 7 மணி நேரம் மின்தடை என்று இருந்தத, இப்போ அந்த மாதிரி மின் தடையே இல்லாம பண்ணின #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@IntTam திமுகவின் பெரிய தலைகள் அதிமுகவிலிருந்து சென்றவர்கள்... முதலில் சொந்தக் கட்சி தொண்டர்களை மதிக்கும் #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@raja_valliyappa #அத்திக்கடவு_அவிநாசி போராட்டம் வாபஸ், #அரசு_ஊழியர்களின் பேராட்டம் வாபஸ், மக்களுக்கு நல்லது செய்யுற ஆட்சி #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@v2wit: வெள்ளத்தின்போது எதற்கு வீண்செலவு என ராணுவத்தை அழைக்காமல் தானே ராணுவத்தளபதி போல செயல்பட்ட #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
அதிமுக ஆட்சியை விமர்சிக்கும் ட்வீட்களில் சில:
@e05627742e2941c: 2011-ல், ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடனை, 2.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்திய #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@vandavaalam: பதவியேற்பு விழாவில் கதறிக் கதறி அழும் சென்ட்டிமெண்ட் காட்சிகளை எல்லாம் எங்கேயாச்சும் பாக்கமுடியுமா? #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@itsbhava: குழந்தையிலேருந்து கிழவர் வரை டாஸ்மாக் மயமாக்கிய புண்ணியம். #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@kumaresann01: 110 மூலம் தமிழக மக்களுக்கு 111 போட்ட சாமர்த்தியதிற்காக... #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@paramporul: 2011 வரைஆட்சி செய்தவர்களின் கூட்டு கடன் 1.10 லட்சம் கோடி. வெறும் 4-1/2வருஷத்துல 1.36 லட்சம்கோடி கடன்வாங்கி சாதித்த #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@VvekSoundar திரும்புன பக்கமெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுன, அசந்தா நம்ம நெத்தியிலையும் ஸ்டிக்கர் ஒட்டுற #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
நடுநிலை எனக் கருதப்படுவோர் ட்வீட்களில் சில...
@AnbarasuRK: இந்த டேக்கு அதிமுக / திமுக ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்மே ஆப்ட்டா இருக்கு #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@alangatan: #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா இந்த டேக்ல ட்வீட் போடுறதுக்கு முன்னால உங்க முதுகை கொஞ்சம் திரும்பி பார்த்துட்டு போடுங்க
@Reshzankan: திமுக, அதிமுக மாற்றே சாலச்சிறப்பு. ஆனால் அதற்கான யாரும் வெளியில் இல்லை என்பதே தமிழகத்தின் தலைவிதி #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
@SidSarvesh: இந்த பக்கம் போனா ஸ்டிக்கர் ஒட்றானுங்க, அந்த பக்கம் போனா மேடைய போட்டு பாராட்டு விழா நடத்தறாய்ங்க! #முடியல #இந்தஆட்சிமாறத்தான்வேண்டுமா
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago