அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா; தினசரி பாதிப்பு 1 லட்சமாக உயர்வு

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டு நிலையில் மொத்த கரோனா பாதிப்பு 4 கோடியை நெருங்குகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,19,642 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 569 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3.9 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.0 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 6, 56,393 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக கலிபோர்னியாவில் 43 லட்சமும், டெக்சாஸில் 35 லட்ச பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் இதுவரை 52% பேருக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE