தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை பாஜக வரவேற்கிறது: அண்ணாமலை

By அ.முன்னடியான்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை வரவேற்கிறோம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஆக.31) புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்துவிட்டது. 3-வது அலையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். தற்போது கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளைத் திறக்கிறார்கள்.

இதில் எந்தத் தவறும் இல்லை.

நிச்சயமாகப் பள்ளிகளைத் திறக்க வேண்டும். ஏனென்றால், அசாதாரணமான சூழ்நிலையில் குழந்தைகளை 2 ஆண்டுகள் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளோம். இதனால் எல்லாக் குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையில் பெற்றோர், ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

அதே நேரத்தில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இப்போதுதான் அவர்களுக்கும் தடுப்பூசி வந்துள்ளது.

இருப்பினும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளிகள் திறப்பை பாஜக வரவேற்கிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்