குடும்பத் தகராறு; மனைவி மீது கணவன் ஆசிட் வீச்சு; சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு: கணவன் கைது

By வி.சீனிவாசன்

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் சிகிச்சைப் பலனின்றி மனைவி உயிரிழந்தார். ஆசிட் ஊற்றிய கணவனைக் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (55). சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வையப்பமலையைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே, ரேவதி மீது கணவன் ஏசுதாஸுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை (ஆக. 30) ரேவதியும் அவரது தாய் ஆராயியும் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர். புகார் கொடுத்துவிட்டு, பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பின்னால் வந்த ரேவதியின் கணவர் ஏசுதாஸ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ரேவதி முகத்தில் வீசி விட்டுத் தப்பி ஓடி விட்டார். இதில், ரேவதியின் முகம், மார்பு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரேவதிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உதவி ஆணையாளர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சம்பங்கி மற்றும் போலீஸார் விரைந்து வந்து விசாரித்தனர். சேலம் மாநகரக் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா தப்பியோடிய ஏசுதாஸைப் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, தனிப்படையினர் ஏசுதாஸைத் தீவிரமாக தேடி வந்தநிலையில், இன்று (ஆக. 31) அதிகாலை அவரைக் கைது செய்தனர்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால், இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக மாமியார் மற்றும் மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 secs ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்