கரூர் மாவட்டம் வேலஞ்செட்டியூர் மற்றும் மணவாசி சுங்கச்சாவடிகளில் இன்று (ஆக. 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் வாகன சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறைந்தப்பட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.1,165 வரை கட்டணம் உயர்கிறது.
கரூர் மாவட்டம் கரூர், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலஞ்செட்டியூர் மற்றும் கரூர், திருச்சி தேசிய நெடுங்சாலையில் உள்ள மணவாசி சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் செப். 1ம் தேதி சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இரு சுங்கச்சாவடிகளிலும் உயர்த்தப்பட்டுள்ள புதிய சுங்ககட்டண உயர்வு இன்று (ஆக. 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
கரூர் மாவட்டம் வேலஞ்செட்டியூரில் உள்ள சுங்கச்சாவடியில் ஒரு முறை பயணத்திற்கு கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.90லிருந்து, ரூ.95 ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.130லிருந்து ரூ.140ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ.2,625லிருந்து ரூ.2,835 ஆகவும், இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.155லிருந்து ரூ.165ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.230லிருந்து ரூ.250ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ.4,595லிருந்து, ரூ.4,960 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் ட்ரக் ஆகியவற்றிற்கு ஒரு முறை கட்டணம் ரூ.305 லிருந்து ரூ.330 ஆகவும, ஒரு நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.460லிருந்து ரூ.495 ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ.9,195லிருந்து ரூ.9,920 ஆகவும், பல அச்சு (2 அச்சுக்கு மேல்) கொண்ட வாகனங்களுக்கு ரூ.495லிருந்து ரூ.530 ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.740லிருந்து, ரூ.795ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ.14,775லிருந்து ரூ.15,940ஆக கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசி சுங்கச்சாவடி கட்டண உயர்வு
மணவாசி சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப் வாகனங்களுக்கு ஒரு முறை மற்றும் ஒரு நாளில் பலமுறை பயணக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. அவை முறையே ரூ.45, ரூ.70 என அப்படியே நீடிக்கிறது. கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கான ஒரு மாதத்திற்கான பலமுறை பயணக் கட்டணம் ரூ.1,380லிருந்து ரூ.1420 ஆகவும், இலகுரக வர்த்தக வாகன ஒரு முறை கட்டணம் ரூ.80லிருந்து ரூ.85ஆகவும், ஒரே நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.120லிருந்து ரூ.125 ஆகவும். ஒரு மாதத்திற்கான பலமுறை பயணக் கட்டணம் ரூ.2,415லிருந்து ரூ.2,490 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் டிரக் ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.160லிருந்து ரூ.165ஆகவும், ஒரே நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.240லிருந்து ரூ.250 ஆகவும், ஒரு மாதத்திற்கான பலமுறை பயணக் கட்டணம் ரூ.4,830லிருந்து ரூ.4,975 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. பல அச்சு (2 அச்சுகளுக்கு மேல்) கொண்ட வாகனங்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.260லிருந்து ரூ.265 ஆகவும். ஒரே நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.390லிருந்து ரூ.400 ஆகவும், 1 மாதத்தில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.7,765லிருந்து ரூ.7,995 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.5ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.1,165 வரை சுங்கக்க ட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago