தேனியில் தொடரும் குழந்தை திருமணங்கள்: தடுக்க முடியாமல் திணறும் சமூகநலத் துறையினர்

By ஆர்.செளந்தர்

தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தடுக்க முடியாமல் சமூகநலத் துறையினர் திணறி வருகின்றனர்.

தேனி மாவட்டம், விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால், பலர் ஆரம்பக் கல்வியோடு முடித்துக் கொள்கின்றனர். பெண்கள் களையெடுப்பு, நாற்று நடுதல் மற்றும் கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர். இதே நிலைதான், பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பெரும்பாலானோர் கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே உள்ளனர்.

மகள் பூப்பெய்து விட்டால், திருமணத்துக்குத் தயாராகி விட்டதாகக் கருதுகின்றனர். அதனால் 14, 15 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து கொடுப்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சில இடங்களில் சொந்தம் விட்டுப் போகக்கூடாது. என்பதற்காக வயது அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என தாய்மாமன், முறைமாமன் என உறவுமுறை கொண்ட நபர்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர். சிறுவயதிலேயே திருமணமாகும் பெண்கள் கருத்தரிக்கும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதோடு, உடல்நிலை மிகவும் மோசமடைந்து பலவீனமாகி விடுவதோடு, சிறுவயதிலேயே முதுமை தோற்றம் வந்து விடுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த இரு வாரத்தில் மட்டும் ஆண்டிபட்டி, உத்தமபாளை யம் பகுதியில் 6 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. ஆண்டிபட்டி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைப்பதற்காக விடுதியில் தங்கி படித்து வந்த 9-ம் வகுப்பு மாணவியை, பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி பெற்றோர் அழைத்து வந்து அவரை விட 15-வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

தகவலறிந்த சமூகநலத் துறையினர் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது, பெற்றோர் தங்களது கவுரவப் பிரச்சினை என்று திருமணத்தை நிறுத்த மறுத்து விட்டனர். வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். என போலீஸார் எச்சரித்த பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டது.

சில நேரங்களில் தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் தகவல் தெரியாத காரணத்தினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடியாமல் சமூக நலத்துறையினர் திணறி வருகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெற்றோர் மகளுக்கு விரைவில் திருமணம் முடித்து விட்டால், தமது கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். மேலும் கணவர், மனைவி வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் பலர் திருமணம் முடிந்த உடன் கேரள தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று உடலாலும், உள்ளத்தினாலும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனை உணர்ந்து, பெற்றோர் தங்களது மகள்களுக்கு 18 வயதுக்கு மேல் தான் திருமணம் நடத்த வேண்டும். அப்போது தான், அந்த பெண்ணின் வாழ்க்கை நலமாக இருக்கும் என்றார்.

சிறுவயதில் திருமணமாகும் பெண்களின் உடல், மனநிலை பலவீனமாகி விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்