ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் முறைகேடாக விற்பனை செய் யப்பட்ட தமிழ்நாடு வக்பு வாரியத் தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன என தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம்.அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:
ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட, அபகரிக்கப்பட்டுள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப் பிலான சொத்துகளைக் கண்ட றிந்து, அவற்றை மீட்டெடுக் கும் மிகப் பெரிய பணியைத் தொடங்கியுள்ளோம். வக்பு வாரி யச் சொத்துகளை மீட்டு, பொது மக்களுக்கான கல்வி நிறுவ னங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவோம்.
ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, பண பலம் ஆகியவற்றை பயன்படுத்தி, இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
வக்பு வாரிய சொத்துகளைப் பராமரிக்கும் பணியில் மதரசாக் கள், தர்காக்கள் உள்ளிட்ட நிர்வா கங்களுக்கு இடையே பல்வேறு மோதல்கள், குற்றச்சாட்டுகள் உள்ளதால், அந்த நிர்வாகங்களைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை வக்பு வாரியம் சட்டரீதியாக மேற்கொண்டு வருகிறது.
முறைகேடுகளில் ஈடுபட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மீது இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், முறைகேடு களில் ஈடுபட்டதாக மூத்த கண்காணிப்பாளர் ஒருவர் 2 நாட் களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வக்பு வாரிய பணியிடங்களுக்கு இனி வெளிப்படைத்தன்மையுடன் ஆள்தேர்வு நடத்தப்படும். அந்த வகையில், வக்பு வாரியத்தில் புதிதாக 27 இளநிலை அலுவ லர்களை தொடர்புடைய அரசுத் துறைகளின் வாயிலாக போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், மில்லத் எம்.பி.முகம்மது இஸ்மாயில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் மடுவை எஸ்.பீர்முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கோம்பை ஜெ.நிஜாமுதீன், திருச்சி மாவட்ட நிர்வாகி அப்துல் முத்தலிப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago