புதுச்சேரியில் 96 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 2 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஆக. 29) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 4,950 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில், புதுச்சேரி-65, காரைக்கால்-18, மாஹே-13 பேர் என, மொத்தம் 96 பேருக்கு (1.94 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், 535 பேரும் என, மொத்தமாக மாநிலம் முழுவதும் 692 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,812 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது. புதிதாக 100 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 890 (97.97 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 4 ஆயிரத்து 425 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்