திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு கொடுத்த வாக்குறுதி களில் இருந்து விலகுகிறார்கள் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் ஆலோனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.வாசன் கூறும்போது, ‘‘உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் போட்டியிட வாய்ப்பை பெற வேண்டும், மற்ற பகுதிகளில் கூட்டணியினர் வெற்றி பெற எப்படி பணி செய்ய வேண்டும் என்பது குறித்து ஒருங் கிணைந்த வேலூர் மாவட்ட தமாகா நிர்வாகிகள் கூட்டம் நடை பெறுகிறது.
அகில இந்திய அளவில் விவசாயிகளின் நீண்ட கால நலனை கருதியும் விவசாய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. விவசாயிகள் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கி இன்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நீண்ட நாள் பயன்களை தடுக்க மசோதா நிலுவையில் வைத்துள்ளனர்.
பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் உள்ள ஓராயிரம் பேரின் போராட்டத்தால் கோடிக் கணக்கான விவசாயிகள் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நலன்கள் தடைபடுகிறது.
மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் ஒத்த கருத்தில் இருக்கிறது. கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட எந்த ஒரு நிலையையும் வலியுறுத்தக்கூடாது. இதற்கு, மத்திய அரசும் இசைவு தராது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்ப கர்நாடக அரசு செயல்பட வேண்டும். தமிழக அரசு ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் கொடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச் சியோடு செயல்படுவதுடன், திமுக கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து விலகுகிறார்கள் என கருதுகிறோம்’’ என தெரிவித்தார்.
அப்போது, மாவட்டத் தலைவர்கள் ஆர்.ஜெ.மூர்த்தி (வேலூர் மாநகர்) அருணோதயம் (வேலூர் புறநகர்), குப்புசாமி (திருப்பத்தூர்), அரிதாஸ் (அரக்கோணம்) உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago