மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: பாஜக வெளிநடப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறுகையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் சட்டங்கள். ஆனால், அதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார்.

இருப்பினும் இந்தத் தீர்மானத்துக்கு பாமக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்கள், தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிப்பது என்று கூறி, டெல்லியில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு ஆரம்பம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்