தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தைக் கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து, நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தைக் கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில் 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தைக் கழுவேலி புறம்போக்காக மறுவகைப்படுத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நிலம் தொடர்பாகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
» அர்ச்சகர்கள் நியமனத்துக்குத் தடை விதிக்கக் கோரிய மனு: விசாரணை தள்ளிவைப்பு
» உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? - கமல் ஆலோசனை
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று (ஆக. 26) விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago