உள்ளாட்சித் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2019 மக்களவைத் தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டது. இரு தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியைச் சந்தித்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மட்டும் கமல்ஹாசன் வெற்றிக்கு அருகில் நெருங்கி வந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர். இதையடுத்து, கட்சியின் கட்டமைப்பை மாற்றும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் எனவும் நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப். 15-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக. 26) ஆலோசனை நடத்தினார். தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக, கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, புதுச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்துக் கலந்துரையாடினோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago