அம்மா உணவகத்தை மூடுவேன் என்று சொல்வது ஏழை மக்களை வஞ்சிப்பதாக உள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் அறிவித்தார். ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''அம்மா உணவகம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று நாட்டு மக்களுக்கே தெரியும்.
ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், அடிமட்டத்தில் இருப்போர் வயிறார, குறைந்த கட்டணத்தில் உண்ண வேண்டும் என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாய் உள்ளத்துடன் அம்மா உணவகத்தைத் தொடங்கினார். அதைக் கூட மூடுவேன் என்று சொல்வது ஏழை மக்களை வஞ்சிப்பதாகத்தான் உள்ளது'' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago