ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா வின் (79) ஜாமீனை ஜூலை 10 ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாகவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை யடுத்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சவுதாலாவின் தம்பி பிரதாப் சிங் கடந்த 1-ம் தேதி மரணமடைந்ததை அடுத்து இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜாமீனில் விடுவிக்க கோரியிருந்தார்.
இதை ஏற்று நீதிமன்றம் அவ ருக்கு மூன்று வாரம் ஜாமீன் வழங் கியது. இந்நிலையில், ஜாமீனை நீட்டிக்கக் கோரி டெல்லி உயர் நீதி மன்றத்தில் சவுதாலா மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், இறுதிச் சடங்கைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாலும் தனக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதிருப் பதாலும் ஜாமீனை நீட்டிக்க வேண் டும்’ என்று கோரியிருந்தார்.
குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சவுதாலாவின் உடல் நிலை குறித்து சிபிஐ கண்டறிந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்தது. சவுதாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டி யுள்ளது. இதய சிகிச்சை தொடர் பாக வரும் ஜூலை 4-ம் தேதி மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள வேண்டியுள்ளது’ என்று வாதிட்டனர்.
இதைக்கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங், ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு ஜூலை 10-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டார். ஜூலை 11-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago