ஒரே மேடையில் அணிவகுக்கும் அரசியல் தலைவர்கள்: அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா?

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோட்டில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் நடத்தும் கடன் விடுதலை மாநாட்டில் பங்கேற்க திமுக, பாமக, மதிமுக, தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் உள்ள கட்சி தலைவர்கள் ஈரோட்டில் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் நிபந்தனை யின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி 92 விவசாய அமைப்புகள் இணைந்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு வரும் 19-ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர் களையும் கூட்டு இயக்க பிரதிநிதிகள் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் பெரும்பாலான கட்சிகள் அழைப்பை ஏற்றுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிரும், புதிருமாக உள்ள அரசியல் கட்சி தலைவர் கள், இந்த மாநாட்டின் மூலம் ஈரோட்டில் ஒரே மேடையில் ஏறவுள்ளனர்.

ஆளுங் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றி ணைக்கும் மாநாடாகவும் இது மாறி யுள்ளது. அதே நேரத்தில், கூட்டமைப்பு முன் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்பதாக வைகோ, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஆகியோர் ஏற்கெனவே உறுதியளித்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்கவுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கைகளை ஏற்பதாகவே அறிவிக்கவுள்ளன. இந் நிலையில், விவசாயிகள் கூட்டமைப்பின் ஆதரவு எந்த கட்சிக்கு கிடைக்கும், விவசாயிகள் யாருக்கு வாக்களிப்பார் கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர்களுடன் பேச்சு

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.கே.தெய்வசிகாமணியிடம் கேட்டபோது, ‘எங்களது 16 அம்ச கோரிக்கைகளை ஏற்கிற, நிறைவேற்றுகிற கட்சிகளை மாநாட்டுக்கு வரவேற்கிறோம். திமுக பொருளாளர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் எம்.பி.டி.கே.ரங்கராஜன், சிபிஐ சார்பில் துரைக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதிமுகவை பொறுத்தவரை மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளோம். மாநாட்டுக்கு முந்தைய நாள் வரை, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் விவசாயிகள் வாக்கு யாருக்கு என்பதை 19-ம் தேதி மாநாட்டில் முடிவெடுத்து அறிவிப்போம்.

சட்டமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக் காளர்களை நாங்கள் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இதனை அரசியல் கட்சிகளும் உணர்ந்துள்ளன’ என்றார். இதற்கிடையே விவசாயிகளின் கோரிக்கைகளில் சில அறிவிப்புகளைத் தேர்தலுக்கு முன்பாக அரசு அறிவிப்பதன் மூலம், மாநாட்டில் பங்கேற்கும் விவசாயி கள் சங்கங்களை பிரித்து, அரசுக்கு ஆதரவு மாநாடு நடத்தவும் ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்