மதுரை கோ.புதூரில் 24 மணி நேரமும் மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படும் கழிவுநீர்

மதுரை கோ.புதூரில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலே மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி பகுதியில் மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பராமரிக்கப்படாததால் குப்பைகள் நிரம்பிக் காணப் படுகின்றன. அதனால் மழைக் காலங்களில் இந்த கால்வாய்களில் மழைநீர் செல்ல முடியாமல் குடியி ருப்புகளை வெள்ளம் சூழும் அவலம் ஏற் பட்டுள்ளது.

மதுரை கோ.புதூரில் உள்ள ராமாவர்மா நகருக்கும், சங்கர் நகருக்கும் இடையே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமலேயே 24 மணி நேரமும் மழைநீர் கால்வாயில் விழுகிறது. இது குறித்து கோ.புதூரைச் சேர்ந்த கஸ்தூரி கூறியதாவது:

கோ.புதூரில் சேகரமாகும் கழிவுநீரை வெள் ளக்கல் கொண்டு சென்று சுத்திகரிப்பதற்காக கற்பகம் நகரில் கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு பழுது ஏற்பட்டுள்ளதால் குழாய் வழியாக கழிவுநீரை மாநகராட்சி பணி யாளர்கள் மழைநீர் கால்வாயில் திறந்து விடுகின்றனர். அதனால் கால்வாய் அருகில் உள்ள வீடுகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. மாநகராட்சி பணியாளர்களிடம் புகார் செய்தும். இதுவரை நடவடிக்கை இல்லை என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகு றித்து விசாரித்து உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE