தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு கொடுத்தவர் களிடம் இரண்டு நாட்களில் நேர்காணல் நடத்தி முடித்திருக் கிறார்கள். இதிலும் சில காமெடி காட்சிகள் அரங்கேறி இருக் கின்றன.
கட்சியினரை ஒருங்கிணைத்துச் செயல்படாமல் தன்னிச்சையாக செயல்படும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தங்கபாலு, ப.சிதம்பரம் கோஷ்டிகள் டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுக்கின்றன. குறைந்தபட்சம், தேர்தலை நடத்துவதற்காக சிதம்பரம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவையாவது நியமியுங்கள் என இந்த கோஷ்டிகள் இன்னொரு கோரிக்கையையும் முன்வைக்கின்றன. அப்படி குழு அமைக்கப்பட்டால் தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு எல்லாமே தங்கள் வசம் வந்துவிடும் என்பது இவர்களின் கணக்கு.
எதற்கும் தலைமை இதுவரை தலை அசைக்காததால், ஈ.வி.கே.எஸ். தலைமையில் நாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடமுடியாது என எதிர் கோஷ்டிகள் முரண்டு பிடிக்கின்றன. காங்கிரஸில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டபோது தங்கபாலு, சிதம்பரம் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களுக்கு மனு கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். இதனால், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலர்கூட விருப்ப மனு கொடுக்கவில்லை. அதேசமயம், சிதம்பரத்தின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இருவர் தாங்கள் நேரடியாக விருப்ப மனுவை கொடுக்காமல் விசுவாசிகள் மூலமாக ஒன்றுக்கு இரண்டு, மூன்று என மனுக்களை கொடுக்க வைத்துக் கொண்டார்கள்.
இந்தநிலையில் கடந்த 24, 25 தேதிகளில் மாவட்டங்களில் நேர்காணல் நடந்தது. சிதம்பரம், தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் ஒன்பது பேர் இந்த நேர்காணலை புறக்கணித்தார்கள். சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தியின் அம்மா இறந்து விட்டதால் 11-ம் நாள் காரியம் முடிய வேண்டும் என்று அங்கு மட்டும் நேர்காணல் ஒத்திவைக்கப் பட்டது. மற்ற இடங்களில் மாவட் டத் தலைவர்கள் புறக்கணித்தாலும் நேர்காணல் நடந்து முடிந்திருக் கிறது.
கடலூர் வடக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தின் விசுவாசி. தெற்கு மாவட்டத் தலைவர் விஜயசுந்தரம் ஈ.வி.கே.எஸ். சிபாரிசு. இரண்டு மாவட்டங்களுக்கும் நெய்வேலி நகரியத்தில் உள்ள ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நேர்காணல். ஆனால், சிதம்பரம் ஆதரவாளர்கள் அந்த அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அலைபேசிகளை அணைத்துவிட்டு எஸ்கேப் ஆகி விட்டார்கள் இதனால் முதல்நாளே நேர்காணல் ‘நேர்கோணல்’ ஆனது.
மறுநாள் விருந்தினர் மாளிகையி லேயே நேர்காணலை நடத்தலாம் என மேலிடப் பார்வையாளர் செல்வம் சொன்னபோது, ‘அதெப்படி? கட்சி அலுவலகம் எங்களுக்கும்தானே சொந்தம்’ என்று கிளம்பிய எதிர்கோஷ்டியினர் மறு நாள் காலை 11 மணிக்கு ஒரு வழியாக அலுவலக சாவியை கைப்பற்றி வந்து நேர்காணலை நடத்தினார்கள். இதனால் இரவு 11 மணிவரை நேர்காணல் நடந்தது.
மதுரையில் ஒரு மாவட்டத்தில் நேர்காணலை புறக்கணித்த சிதம்பர விசுவாசிகள் இருவர், பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை சென்னைக்குப் பறந்து போய் மேலிடப் பிரதிநிதி யின் இருப்பிடத்திலேயே நேர் கண்டுவிட்டு வந்திருக்கிறார்கள். இதற்கிடையில், கட்சியை மதித்து விருப்ப மனு கொடுத்து நேர்காணலில் பங்குபெற்றவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என வட மாவட்டங்களில் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன காமெடி காட்சிகளை அரங்கேற்றப் போகிறார்களோ!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தங்கபாலு, ப.சிதம்பரம் கோஷ்டிகள் டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago