60 கிராமங்களில் 100% கரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2.5 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை முறையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆக. 20) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE