கூடுதல் தளர்வுகள்? - முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உச்சத்துக்குச் சென்று, பின் படிப்படியாகக் குறைந்து தற்போது தினசரி எண்ணிக்கை 2,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்றைய (ஆக. 18) நிலவரப்படி, 1,797 பேர் தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். சென்னையில் 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 31 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது, அமலில் உள்ள ஊரடங்கு 23-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து, நாளை (ஆக.20) முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர், மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதில், பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பரவலாகத் தொற்று குறைந்தாலும், சென்னை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அவ்வப்போது தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்