ஐடி துறையில் வேலை பெறுவது எப்படி?- சான்றிதழ் பயிற்சி வகுப்புகள்: திருமா பயிலகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தகவல் தொழில்நுட்பத் துறையில் எவ்வாறு வேலைவாய்ப்பினைப் பெறுவது (How to crack IT jobs) என்ற பயிற்சியும் எம்படட் சிஸ்டம்ஸ் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும் என்று திருமா பயிலகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து எம்.பி.யும், திருமா பயிலகத்தின் காப்பாளருமான திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''கரோனா பெருந்துயர் காலத்தில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது தொற்றுப் பரவல் வீரியம் சற்று குறைந்துள்ளதால், தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. அவ்வேலை வாய்ப்புகளைப் பெற விளிம்பு நிலை சமூகத்தினருக்குப் போதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி தேவைப்படுகிறது.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பொறியியல் படித்து வேலை வாய்ப்புகளைத் தேடும் மாணவ/ மாணவியரின் நலன் கருதி 'திருமா பயிலகம்' மற்றும் ' Forview Technologies Pvt Ltd' நிறுவனமும் இணைந்து 'Embeded Systems' சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பயிற்சியின்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் எவ்வாறு வேலைவாய்ப்பினைப் பெறுவது (How to crack IT jobs) என்ற பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.

மேலும் மாறிவரும் தொழில்நுட்பக் காலத்திற்கு ஏற்ப மாணவர்கள், தனியார் துறையில் வேலை பெறுவதற்கு எவ்வாறு தயாராவது (Job Assurance Training) என்பதைப் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

மேற்கண்ட பயிற்சி வகுப்புகள்

1) சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டத்தில், செங்குந்தபுரம் சாலையில் அமைந்துள்ள சக்தி மெடிக்கல் மற்றும் கல்வி அறக்கட்டளை (TNSTC அருகில்) கல்விக் கூடத்தில், 22-8-2021 முதல் 02-09-2021 வரையிலும்,

2) சென்னையில் அசோக் நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் திருமா பயிலகத்தில் 11-9-2021 முதல் 20-9-2021 வரையிலும் நடைபெறும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் இணைந்து மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: சென்னை- 99528 60844, 95660 65523, ஜெயங்கொண்டம்- 72001 31110.’’

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்