வேலூர் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 60.
வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2014-2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தவர் அதிமுகவின் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன். கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி பா.செங்குட்டுவன் இன்று (ஆக.19) காலை காலமானார். காட்பாடி திருநகர் பகுதியில் உள்ள வீட்டில் பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமமுகவுக்குச் சென்றவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில ஆண்டுகளாகக் கட்சிப் பணியில் இருந்து அவர் விலகியே இருந்தார்.
» அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனரா? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்
» ஆப்கன் அகதிகளுக்கு விசா வழங்கும் ஆஸ்திரேலியா: தூதரகம் முற்றுகை
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.செங்குட்டுவன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், அதைச் சட்ட வழியில் அணுகுவது சட்டத்தில் உள்ள நுணுக்கங்கள் குறித்த புத்தகம் எழுதியுள்ளார். அதை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago