எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்காக கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூடியது.
முன்னதாக, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் போலீஸார் நேற்று (ஆக. 17) மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம், சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது.
அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி அளித்ததும், "கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வது எதற்கு?" என, எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசியதாவது:
"இந்த விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என, நாங்கள் ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். இதில் அரசியல் நோக்கம் இல்லை. அதன் அடிப்படையில், முறையாக நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ நிச்சயமாக இல்லை.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் நிச்சயம் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. இந்த அரசு நிச்சயம் சட்டத்தின் ஆட்சியை நடத்தும்.
கோடநாடு வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்படும் விசாரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு களங்கத்தை சுமத்தியிருக்கிறார். . தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் என்னவானது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். அதில் ஒன்றுதான் இது. இன்னும் பல இருக்கின்றன.
மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். அதனால் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல அதிமுகவினர் செயல்படுகின்றனர்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago