இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சிறைவாசிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி

சிறைவாசிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனம் பரிவர்த்தன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

சிறைச் சாலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வைசீரமைத்துக் கொள்ள உதவும் வகையில், சிறைவாசிகளுக்கு குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க, இந்தியன் ஆயில் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைச்சாலைகளில் பரிவர்த்தன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தை, சென்னைபுழல் மத்திய சிறைச்சாலையில், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் காந்த் மாதவ் வைத்யா, இந்தியன் ஆயில் தென் மண்டல செயல் இயக்குநர்(மண்டல சேவைகள்) கே. சைலேந்த்ரா, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் பி.ஜெயதேவன், புழல் மத்திய சிறைச் சாலையின் காவல்துறை துணைத் தலைவர் (சிறைகள்) முருகேசன் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்படி, சிறைச்சாலைகளில் உள்ள 129 கைதிகளுக்கு பேட்மிண்ட்டன், கைப்பந்து, செஸ், டென்னிஸ் மற்றும் கேரம் ஆகியவிளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி நான்கு வாரம் அளிக்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் காந்த் மாதவ் வைத்யா, "விளையாட்டுப் பயிற்சி மூலம் சிறைவாசிகளின் உடல்நலமும் தன்னம்பிக்கையும் மேம்படும். தண்டனைக் காலம் முடிந்து வருவோரை எங்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் உதவியாளர்களாக பணி அமர்த்துவோம்" என்றார்.

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE