முறையான உத்தரவின்றி ரூ 3 வரை பஸ் கட்டணத்தை தனியார் பஸ்கள் உயர்த்தி ஒரு மாதமாக வசூலித்தபோதிலும் புதுச்சேரி அரசு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் உறக்கத்தில் உள்ளது. நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த துறை அமைச்சரும் மவுனம் காப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கரோனா 2வது அலை பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் தமிழகம், புதுவையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முழு ஊரடங்கும், புதுவையில் தளர்வுகளுடன் ஊரடங்கும் அமலில் இருந்தது. அதேநேரத்தில் தமிழகம், புதுவையில் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.
கரோனா 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் புதுவையில் கடந்த மே மாதமே பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியது.
ஆனால் புதுவையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கப் படாமல் இருந்தது.
» 4 கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய ஆப்கன் அதிபர்: ரஷ்யா
» முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
ஜூலை மாதம் பிற்பகுதியில் புதுவைக்கு தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பஸ்கள் புதுவைக்கு ஜூலை மூன்றாவது வாரத்தில் வர தொடங்கியது. அதேபோல புதுவையில் தனியார் நகர பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால் சத்தமின்றி அரசு உத்தரவு ஏதுமின்றி கட்டணத்தை உயர்த்தின. பல தனியார் பஸ்கள் ரூ.3 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
தனியார் பஸ் பணியாளர்களோ டீசல் விலை உயர்வை காரணமாக தெரிவித்து வெளிப்படையாக பஸ் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்.
இதுபற்றி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் ஒரு மாதமாகியும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணமே வசூலித்தாலும் அரசு தரப்போ, போக்குவரத்து துறையோ துறை அமைச்சரோ நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "அரசு நகர பஸ்களில் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ. 7 ஆக உள்ளது. ஆனால் தனியார் நகர பஸ்களில் ரூ. 10 ஆக உள்ளது. வெளிப்படையாக நடக்கும் இத்தவறை கண்டுகொள்ளாமல் போக்குவரத்துத்துறை ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago