புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக.31 நள்ளிரவு வரை நீட்டிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக. 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான விக்ராந்த் ராஜா இன்று(ஆக. 15) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இது கூடுதல் தளர்வுகளுக்கு ஆக. 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 10 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கலாம்.

சில்லறை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம். சரக்கு போக்குவரத்துக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம்.

பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். வழிபாட்டுத்தலங்களில் 25 பேர்களுடன் திருமணம் செய்யலாம்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம். தொழிற்சாலை பணிகள், கட்டுமானம், உற்பத்தி பணிகள் வழக்கம் போல் நடக்கலாம். அனைத்து வித விளையாட்டுக்களுக்கும், பார்வையாளர்களின்றி அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்