தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வுத்தொகை 18000 ஆக உயர்த்தப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் ரூ.9000 மாக உயர்த்தப்படுகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடு இன்று 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இதனை ஒட்டி சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முன்னால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர், தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வுத்தொகை 18000 ஆக உயர்த்தப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் ரூ.9000 மாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார். முன்னதாக அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
» முக்தியடைந்த மதுரை ஆதீனம் உடல் நல்லடக்கம்: அனைத்து மதப் பிரமுகர்கள், மக்கள் திரண்டு அஞ்சலி
முதல்வர் ஸ்டாலின் உரை முழு விவரம்:
இன்று சுதந்திர தினத்தில் தேசியக் கொடியேற்ற எனக்கு வாய்ப்பு கிடைதத்தில் மகிழ்ச்சி. மாநிலங்களில் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் இந்த சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி. இந்தக் கோட்டையில் முதல்வராகக் கொடியேற்றினார் கருணாநிதி. தமிழக முதல்வர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவில் அனைத்து முதல்வர்களுக்கும் அவர் அந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்.
இன்று நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மாதத்துக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா, மதுரைக்கு வந்த காந்தி அரையாடை அணிந்த நூற்றாண்டு விழா, வஉசி 150வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. புரட்சிக்கவி பாரதி மறைந்து நூறாண்டுகள் ஆகிறது. இவ்வாறாக இந்த ஆண்டு பல்வேறு புகழ் கொண்டது. இருப்பினும் தனிப்பட்ட முறையில், இந்த ஆண்டு 6வது முறையாக திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதில் எனக்குப் பெருமிதம்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித் தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தில்லையாடி வள்ளியம்மை, திருவிக, நாமக்கல் ராமலிங்க, பாரதிதேசன், திருப்பூர் குமரன், ஜீவா, கேப்டன் லக்ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள் எனப் பல தலைவர்களின் மூச்சுக் காற்றால் கட்டப்பட்டது தான் இந்த சுதந்திர நினைவுத் தூன். இவர்கள் தமிழக தியாகிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள்.
தியாகிகளைப் போற்றும் மண் தமிழகம். அந்த வகையில், தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வுத்தொகையை ரூ.18000 ஆக உயர்த்துகிறது. குடும்ப ஓய்வூதியம் மேலும் ரூ.ஆயிரம் அதிகரிக்கப்பட்டு ரூ.9000 மாக வழங்கப்படும் என்பதை பெருமிதத்தோடு அறிவிக்கிறேன்.
சீன அச்சுறுத்தலின் போது நாட்டுப் பாதுகாப்புக்காக ரூ.6 கோடி நிதி வழங்கியவர் கருணாநிதி. அப்போது, நாடு முழுவதுமிருந்து மொத்தம் திரட்டப்பட்டது 25 கோடி ரூபாய். அதில் தமிழகம் மட்டும் ரூ.6 கொடி நிதி வழங்கியது. அதேபோல், கார்கில் போரின் போது 3 தவணைகளாக ரூ.50 கோடி நிதி வழங்கப்பட்டது என்பதை நினைவு கூர்கிறேன்.
இந்த ஆண்டு வஉசி 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. சுதேசி சிந்தனையாக மாற வேண்டும் என நினைத்தவர் வஉசி. பொருளாதார விடுதலைக்கு வலியுறுத்தியவர் வஉசி.
கரோனா நெருக்கடியை வெல்வோம்:
கரோனா நமக்கு நிறைய படிப்பினை கொடுத்திருக்கிறது. மருத்துவ, பொருளாதார, சூழல் நெருக்கடி எனப் பல நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது. அதனை சமாளிக்க உதவிய சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு நான் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இன்று 101வது நாள். தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தமிழக நிதி நிலையை மக்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த அரசு கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. ரூ.4000 நிதியுதவியை மக்களுக்கு இரு தவணைகளாக வழங்கியிருக்கிறது. 14 பொருட்கள் கொண்ட மளிகைப் பொருட்கள் தொகுப்புப் பை வழங்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளோம். மகளிர், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அன்னைத் தமிழில் அர்ச்சணை செய்யலாம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டுள்ளது.
3 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது தமிழக அரசு. கிண்டியில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைடை ரூ.250 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகம், அறிவியல், பொருளாதாரம் மூன்றிலும் தமிழகம் ஒருசேர வளர வேண்டும் என்பதே கனவு. அதை நிறைவேற்ற உழைக்கிறோம். மனித உரிமை கொண்ட சமூகமாக மாற வேண்டும் என நினைக்கிறோம். அந்த வகையில், மேன்மைமிகு தமிழ்நாட்டை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago