வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு ரூ.573.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இளநிலை தோட்டக்கலை பாடத்திட்டத்தை கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கென முதல்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்கு நடப்பாண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயறு மற்றும் எண்ணெய்வித்துக்களில் அதிக மகசூல் தரக்கூடிய ரகங்களை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தவும், பாரம்பரிய, உயர் விளைச்சல் ரகங்கள் பற்றியஆராய்ச்சி நடத்தவும் நடப்பு ஆண்டு ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தொலையுணர்வு தொழில்நுட்பத்தின் மூலம், பயிர் பரப்பளவு, மகசூல் மதிப்பீடு, மண், நிலவள வரைபடம், பேரிடர்களின் தாக்கத்தை மதிப்பிடுதல் குறித்த ஆராய்ச்சிகள் செயல்படுத்தப் படும். 17,514 பாசன ஏரிகளின் வரைபடம் கணினிமயமாக்கப்பட்டு அவற்றின் நீர் பரப்பானது செயற்கைக் கோள் உதவியுடன் கண்காணிக்கப்படும். இந்த ஆண்டுதொலையுணர்வுத் தொழில்நுட்பம் மூலம் முக்கிய பயிர்கள் குறித்த தகவல்களை உருவாக்கி, பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக ரூ.72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய அளவில் மஞ்சள் உற்பத்தியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் 100 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும். இதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago