கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு திமுக சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் நடந்த நிகழ்விற்கு நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் கலந்து கொண்டு இனிப்புகளும், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இதேபோல் காவேரிப்பட் டணத்தில் நகரச் செயலாளர் ஜே.கே.எஸ்.பாபு தலைமை வகித்தார். இதில் திமுக பிரமுகரும், தொழிலதிபருமான கே.வி.எஸ்.சீனிவாசன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். ஓசூரில் மாநகர திமுக பொறுப்பாளர் சத்யா தலைமையில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இலவச பெட்ரோல்
பெட்ரோலுக்கான வரி ரூ.3 குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் 150 வாகனங்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அஸ்லாம் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன் பங்கேற்று, வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கினார். இதில், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரும், முன்னாள் எம்பி.யுமான வெற்றிச்செல்வன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago