பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அந்த தொகுதியில் பாஜகவினர் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக, காங்கிரஸ் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. வேலூரில் அதிமுக சார்பில் செங்குட்டுவன், காங்கிரஸ் சார்பில் விஜய் இளஞ் செழியன், திமுக கூட்டணி சார்பில் அப்துல்ரகுமான் ஆகியோர் வேட் பாளர்களாக அறிவிக்கப்பட்டுள் ளனர். இந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட வேலூர், தஞ்சாவூர் தொகுதிகளில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை. பாஜக நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் பாஜக கூட்டணி யில் உள்ள புதிய நீதிக்கட்சி தலை வர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் வேலூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் வேட்பாளர் யார் என்ப தற்கு விடை கிடைக்கவில்லை. இத னால் பாஜகவினர் சோர்வடைந்து இருந்தனர். இந்நிலையில் வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை வேலூர் கிருபா னந்தவாரியார் சாலை, மணிக் கூண்டு, லாங்குபஜார் ஆகிய பகுதி களில் மாவட்ட தலைவர் பாபாஸ் பாபு தலைமையில் பாஜகவினர் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
அப்போது மாவட்ட பொருளாளர் கலைமகள் இளங்கோ உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். வேட்பாளரே அறிவிக்காத நிலையில் பாஜகவி னர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணியில் தொகுதி பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு முன்பே தேமுதிக தலைவர் விஜய காந்த், வேலூர் தொகுதியில் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை ஏற் கெனவே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago