மூலிகைச் செடிகள் கொண்ட தழைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் சிறப்பம்சங்கள்:
* அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1,000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ளவும் மானியம் வழங்கப்படும்.
* காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் ரூ.95 கோடியில் செயல்படுத்தப்படும்.
* மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தழைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
* வைட்டமின் சி பெட்டகம் என அழைக்கப்படும் நெல்லி. 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும்.
* மூலிகை செடிகள், நெல்லி காய்கள் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணை மற்றும் மூலிகை மருந்து நிறுவனத்துக்கு வழங்கப்படும். மூலிகை செடிகளை பெருக்கும் திட்டம், ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* அறுவடைக்குப் பின் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்க ரூ.52.02 கோடி நிதி ஒதுக்கீடு
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago