தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழகத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும், அந்த நிதியாண்டுக்கான வரவு-செலவு குறித்த அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படும். இதில், அரசின் அனைத்து துறைகளின் வரவு- செலவு, புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வேளாண்மை துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, முதல்வர் அறிவுறுத்தல்படி விவசாய சங்கங்கள், வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்தும் வணிகர்கள் சங்கங்கள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக்கேட்டு, அதனடிப்படையில் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இறுதி செய்துள்ளார்.

தமிழக பொதுநிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (ஆக. 13) தாக்கல் செய்தார். இந்நிலையில், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்